2018 ஆம் ஆண்டிற்கான இந்தியா – வியேஸ்படேன் (Wiesbaden) மாநாடு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் தலைப்பு “ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1540-ன் திறன்பட்ட அமல்பாட்டினை நோக்கி அரசு – தொழிற்துறை கூட்டிணைவு மூலம் உலக விநியோக சங்கிலியை பாதுகாத்தல்” (Securing Global Supply Chains through Government-Industry Partnerships towards Effective Implementation of UNSC Resolution 1540) என்பதாகும்.
ஜெர்மன் அரசாங்கம் மற்றும் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (UN Office for Disarmament Affairs-UNODA) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியா – வியேஸ்படேன் மாநாட்டை நடத்தியுள்ளது.
பிக்கி எனும் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகக் கழகங்களின் சம்மேளனம் (FICCI- Federation of Indian Chambers of Commerce and Industry) இந்த மாநாட்டின் தொழிற்துறை பங்களிப்பாளராகும்.
UNSC தீர்மானம் 1540
அரசு – தொழில்துறை கூட்டிணைவு மூலம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் 1540-ன் அமல்பாட்டினை (UNSC Resolution 1540) வலுப்படுத்துவதற்காக 2012-ஆம் ஆண்டு ஜெர்மனி அரசினால் வியேஸ்படென் செயல்முறை (Wiesbaden Process) தொடங்கப்பட்டது.
பேரழிவு ஆயுதங்களின் (weapon of mass destructions) சர்வதேச பரவலைத் தடுப்பதற்கான தன்னுடைய நீண்ட கால நிலைப்பாட்டு அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, UNSC 1540 தீர்மானத்தை அமல்படுத்துவதற்காக சட்ட பின்னளிப்பு உடைய வலிமையான ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
உறுப்பினரல்லாத நாடுகளுக்கு அணு ஆயுத (nuclear), வேதியியல் (chemical), உயிரியல் ஆயுதங்கள் (biological weapons) மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகளின் (delivery systems) பரவுதலைத் தடுப்பதற்கு போதிய மற்றும் திறம்பட்ட நடவடிக்கையை ஏற்று அவற்றை செயல்படுத்த ஐ.நா. அவையின் பாதுகாப்புக் கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகள் மீதும் ஐ,நா. பாதுகாப்பு கவுன்சில் 1540 தீர்மானமானது சட்டப் பிணைப்புக் கடமையை (legally binding obligations) ஏற்படுத்துகின்றது.