இந்தியா மற்றும் ஹெல்லேனிக் (Hellenic) நாடுகளுக்கு இடையே புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding-MoU) ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பிற்கான களங்களோடு (areas of cooperation) தொடர்புடைய விஷயங்களை விவாதிப்பதற்கும், மதிப்பிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் ஓர் கூட்டுப் பணிக் குழு (Joint Working Group -JWG) இந்த ஒப்பந்தத்தின் படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பரஸ்பர நன்மைச் சமநிலை (mutual benefit equality) அடிப்படையில் புதிய மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான விவகாரங்கள் மீது தொழில்நுட்ப ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவற்றை ஊக்குவிக்கவும் நிறுவன வகையிலான ஒத்துழைப்புக் கூட்டுறவிற்கு (Cooperative institutional relationship) அடிப்படையை ஏற்படுத்துவதுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும்.