TNPSC Thervupettagam

இந்தியா – ஆப்பிரிக்கா உறவுகள்

August 4 , 2019 1847 days 635 0
  • பெனின், காம்பியா மற்றும் கினியா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுதில்லி திரும்பினார்.
  • இந்த மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் எந்த ஒரு குடியரசுத் தலைவராலும் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் இதுவேயாகும்.
  • கினியாவில் அவர் அந்நாட்டின் மிக உயரிய குடிமையியல் விருதான தேசிய மரியாதைக்குரிய ஆணையைப் பெற்றார்.
  • பாரம்பரிய மருத்துவம், ஆப்பிரிக்கா முழுமைக்கான மின்னணு இணையத் திட்டம், சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணு கல்வி மற்றும் ஆயுர்வேதா ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • ஆப்பிரிக்கா முழுவதுமான மின்னணு இணையத் திட்டம் :
    • இது 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆப்பிரிக்க நாடுகளை இணைப்பதற்காக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உயர்தர, கண்ணாடி இழைகளாலான மற்றும் கம்பிகளற்ற வலையமைப்பை உருவாக்கிட எண்ணுகின்றது.
    • இத்திட்டத்திற்கான யோசனை 2004 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடமிருந்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்