இந்தியா – சீனா இடையிலான 75 ஆண்டுகால அரசுமுறை உறவுகள்
January 30 , 2025 24 days 83 0
இந்தியாவும் சீனாவும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகளையும் 2025 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
இது புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையேயான அரசுமுறை உறவுகள் நிறுவப் பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஆனது 2020 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டன.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முக்கிய எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஆறு அம்சங்கள் மீதான ஒப்பந்தங்களில் உடன்பாடுகளைத் தெரிவித்தன.
2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மதிப்பு, 126.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய நிலையில் இது 1.9 சதவீதம் என்ற வருடாந்திர வளர்ச்சியைக் காட்டுகிறது.
சீன நாட்டுத் தூதரகமானது கடந்த ஆண்டு இந்தியர்களுக்கு 280,000 நுழைவு இசைவுச் சீட்டுகளை வழங்கியுள்ளது.