இந்தியாவின் எஃகு இறக்குமதியானது சுமார் 38 சதவீதம் அதிகரித்து 8.319 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
எனவே, இந்தியா 2023-24 ஆம் நிதியாண்டில் நிகர எஃகு இறக்குமதியாளராக மாறி உள்ளது.
முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா 6.022 மில்லியன் டன்கள் (MnT) அளவிலான நிறைவு செய்யப்பட்ட எஃகு இறக்குமதியை மேற்கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் 6.71 மில்லியன் டன்னாக இருந்த எஃகு ஏற்றுமதியானது 11.50 சதவீதம் அதிகரித்து 7.48 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் 123.19 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் கச்சா எஃகு உற்பத்தி ஆனது 12.40 சதவீதம் அதிகரித்து 138.48 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
முழுமையடைந்த எஃகு பொருட்கள் நுகர்வு ஆனது சுமார் 135.95 மில்லியன் டன்னாக இருந்தது என்ற நிலையில், இது முந்தைய ஆண்டில் இருந்த 119.89 மில்லியன் டன் அளவை விட 13.40 சதவீதம் அதிகமாகும்.
தேசிய எஃகுக் கொள்கையின் கீழ், இந்தியா தனது வருடாந்திர எஃகு உற்பத்தித் திறனை 2030 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டன்னாகவும், தனிநபர் எஃகு நுகர்வினை 160 கிலோவாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.