TNPSC Thervupettagam

இந்தியா - 6 வது பெரிய பொருளாதாரம்

July 12 , 2018 2188 days 736 0
  • உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரான்ஸை விட இந்தியா முன்னேறி மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் (GDP - Gross Domestic Product) உலகில் 6 வது பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது.
  • 2017ஆம் ஆண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.597 டிரில்லியன் ஆகும். பிரான்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $ 2.582 டிரில்லியன் ஆகும்.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பிரான்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விஞ்சிய பொழுதும், இந்தியாவின் தனிநபர் வருமானம் பிரான்ஸின் தனிநபர் வருமானத்தை விடக் குறைவானதாகவே உள்ளது. பிரான்ஸின் தனி நபர் வருமானம் இந்தியாவின் தனிநபர் வருமானத்தைப் போல் 20 மடங்கு ஆகும்.
  • சர்வதேச பண நிதியத்தின் கணக்கீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் முறையே 7.4% மற்றும் 7.8% வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்