பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியில் (EBRD – European Bank for Reconstruction & Development) இந்தியா உறுப்பினராவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை இந்தியா உறுப்பினர் ஆவதற்குத் தேவையான அனைத்து அவசிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
EBRD-ல் இந்தியா உறுப்பினராகுதலானது சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் உதவும்.
இந்தியா, உலக வங்கி (World Bank-WB), ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank-ADB), ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி (African Development Bank-ADB), ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank -AIIB) புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank -NDB) போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஊக்கம் கிடைப்பதோடு, இந்தியர்கள் ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியில் பணிபுரியவும் வாய்ப்புகள் உண்டாகும்.
EBRD
EBRD ஓர் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.
இது 1991ல் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் தலைமையகம் – இலண்டன்
65 நாடுகளாலும், இரு ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்களாலும் இவ்வங்கி நடத்தப்படுகிறது.
இவ்வங்கியில் அமெரிக்க பெரும் பங்குதாரராக உள்ளது.
EBRD-ல் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற கண்டத்தைச் சார்ந்த நாடுகளும் உறுப்பினராக உள்ளன.அவையாவன
வட அமெரிக்கா ― கனடா, அமெரிக்கா
ஆப்பிரிக்கா ― மொராக்கோ
ஆசியா ― ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா
உறுப்பு நாடுகளில் செயல்படும் தனியார் துறைகளை மேம்படுத்துவதே EBRD வங்கியின் முக்கிய செயல்பாடாகும்.
EBRD வங்கியில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் ஆரம்பகட்ட முதலீடாக ஒரு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டும்.
EBRD வங்கியும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் (European Investment Bank) ஒன்றல்ல. வெவ்வேறானவை.
இது முழுவதும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களால் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக நடத்தப்படுகிறது.