2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி பிரதமர் இந்திய அஞ்சலக வங்கிச் சேவையை துவக்கி வைத்தார்.
இந்த அஞ்சலக வங்கிச் சேவையின் மூலம் வங்கிச் சேவைகள் நாட்டின் தொலைத் தூரப்பகுதிகளுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவர்கள் வசதிக்கேற்ப சென்றடையும். இவ்வங்கி அஞ்சல் அலுவலகங்கள் வழியாகவும், கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் மூலமாகவும் சேவைகளை அளிக்கும்.
ஜன்தன் யோஜனாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இந்திய அஞ்சலக வங்கிச் சேவை மேலும் ஒரு படியாகும்.