உலகத் தங்க ஆணையமானது “சில்லறை வியாபாரத் தங்கக் கண்ணோட்டம்; இந்திய அணிகலன்கள் அறிக்கை” என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, ஏறத்தாழ 37% இந்தியப் பெண்கள் அணிகலன்கள் வாங்கியதே இல்லை.
ஆடைகள் மற்றும் பட்டுச் சேலைகளுக்கு அடுத்து, “அலங்கார மற்றும் ஆடை அணியும் வாழ்க்கைப் பாணி” நுகர்வோர்களிடையே இரண்டாவது மிகவும் புகழ்பெற்ற பொருள் தங்க அணிகலன்கள் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.