TNPSC Thervupettagam

இந்திய அந்நியச் செலாவணி இருப்பு

September 1 , 2022 688 days 407 0
  • ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது 6.69 பில்லியன் டாலர் குறைந்து 564 பில்லியன் டாலராக உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் 5.8 பில்லியன் டாலர் என்ற அளவிற்கும், தங்கத்தின் கையிருப்பு 704 மில்லியன் டாலர் என்ற அளவிற்கும் சரிந்ததன் காரணமாக இந்த வீழ்ச்சியானது ஏற்பட்டது.
  • தற்போது அந்நியச் செலாவணி இருப்பானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைவான அளவில் உள்ளது.
  • அந்நியச் செலாவணி இருப்பானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் தேதியன்று முடிவடைந்த வாரத்தில் 642 பில்லியன் டாலர்களை எட்டிய போது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
  • து 2021-22 ஆம் ஆண்டிற்கு என்று கணிக்கப்பட்ட 14 மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளுக்குச் சமமானதாகும்.
  • தற்போதைய கையிருப்பு நிலையானது 2022-23 ஆம் ஆண்டிற்கு என்று கணிக்கப்பட்ட சுமார் 9 மாத இறக்குமதியை ஈடு செய்யும்.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது சீனா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் நான்காவது பெரியது என்ற நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்