TNPSC Thervupettagam

இந்திய அமைதிப்படையினருக்கு ஐ. நா பதக்கம்

October 18 , 2017 2643 days 897 0
  • தெற்கு சூடானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 50 இந்திய அமைதிப் படையினருக்கு ஐநா பதக்கம் (UN Medal) வழங்கப்பட்டுள்ளது.
  • மோதல்கள் நிறைந்த நாடான தெற்கு சூடானில் அமைதியின் கட்டுமானத்திற்கும், மக்களை பாதுகாப்பதில் வீரர்கள் புரிந்த சேவைக்காகவும், வீரர்கள் கொண்டுள்ள பணி சார்ந்த மனப்பான்மைக்காகவும் (Professionalism ) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • UNMISS எனப்படும் ஐநா தெற்கு சூடானிய மிஷனின் ஒரு பகுதியாக இந்திய அமைதி காவல்படையினர் தெற்கு சூடானின் ஜோங்லேய் பிராந்தியத்தின் போர் (Bor) பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • அமைதிகாத்தல், மனிதாபிமான முயற்சிகள், பேரிடர் நிவாரணம் போன்றவற்றின் மீதான சர்வதேச இராணுவ மற்றும் காவற்படையினரின் கூட்டு செயல்பாடுகளுக்கு பங்களிப்பினை தரும் பல்வேறு உலக நாடுகளின் இராணுவத்திற்கு ஐநா அவையால் இந்த சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
  • இப்பதக்கம் ஐநா-வால்  கொரியப் போரின் போது (1950 – 53) முதன் முதலாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்