தெற்கு சூடானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 50 இந்திய அமைதிப் படையினருக்கு ஐநா பதக்கம் (UN Medal) வழங்கப்பட்டுள்ளது.
மோதல்கள் நிறைந்த நாடான தெற்கு சூடானில் அமைதியின் கட்டுமானத்திற்கும், மக்களை பாதுகாப்பதில் வீரர்கள் புரிந்த சேவைக்காகவும், வீரர்கள் கொண்டுள்ள பணி சார்ந்த மனப்பான்மைக்காகவும் (Professionalism ) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
UNMISS எனப்படும் ஐநா தெற்கு சூடானிய மிஷனின் ஒரு பகுதியாக இந்திய அமைதி காவல்படையினர் தெற்கு சூடானின் ஜோங்லேய் பிராந்தியத்தின் போர் (Bor) பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அமைதிகாத்தல், மனிதாபிமான முயற்சிகள், பேரிடர் நிவாரணம் போன்றவற்றின் மீதான சர்வதேச இராணுவ மற்றும் காவற்படையினரின் கூட்டு செயல்பாடுகளுக்கு பங்களிப்பினை தரும் பல்வேறு உலக நாடுகளின் இராணுவத்திற்கு ஐநா அவையால் இந்த சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
இப்பதக்கம் ஐநா-வால் கொரியப் போரின் போது (1950 – 53) முதன் முதலாக வழங்கப்பட்டது.