இந்திய அரசின் LiFE முன்னெடுப்பு குறித்த சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கை
February 15 , 2023 651 days 293 0
சர்வதேச எரிசக்தி முகமையானது, சமீபத்தில் LiFE முன்னெடுப்பு குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களை ஈடுபடுத்தச் செய்வதனை LiFE என்ற முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையானது, இந்தத் திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 440 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சேமிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது.
வளர்ச்சி பெற்ற நாடுகளில், பணக்கார வர்க்கத்தினர்களால் வெளியிடப்படும் கரிம உமிழ்வுகள் ஏழைகளால் உருவாக்கப்பட்ட கரிம உமிழ்வை விட ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
மேம்பட்ட நாடுகளின் தனிநபர் கரிம உமிழ்வுகள் வளர்ந்து வரும் நாடுகளை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
உலக நாடுகளை விட இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் 10% அதிகமாகும்.
தற்போது, இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மூன்றாவது பெரிய சந்தையாக உள்ளதோடு மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சார வாகன விற்பனையானது 2021 ஆம் ஆண்டை விட 5% அதிகரித்துள்ளது.
தற்போது, அதிகபட்ச ஆற்றலானது வட அமெரிக்க நாடுகளில் தான் பயன்படுத்தப் படுகிறது.
இந்தப் பகுதியைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகள் இரண்டாவது பெரிய ஆற்றல் நுகர்வோராக திகழ்கின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகளானது மூன்றாவது பெரிய ஆற்றல் நுகர்வோராக திகழச் செய்கின்றன.
உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆற்றலினை ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்துகின்றன.
உலக ஆற்றல் பயன்பாட்டில் இந்தியா 35% பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.