நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசியலமைப்பு தினம் (Sam Vidhan Divas) கொண்டாடப்படுகின்றது.
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதை பறைசாற்றும் வகையில் அத்தினம் தேசிய அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950, ஜனவரி 26 அன்று (இந்திய குடியரசு தினம்) அமலுக்கு வந்தது.
தேசிய அரசியலமைப்பு தினமானது 2015-ல் நிறுவப்பட்டது.
நவம்பர் 26-ஆம் தேதி ஆனது தேசிய சட்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது.