TNPSC Thervupettagam

இந்திய அறிவுசார் சொத்து அறிக்கை 2018-19

October 22 , 2020 1495 days 649 0
  • அறிவுசார் சொத்து குறித்த இந்திய வருடாந்திர அறிக்கையானது இந்திய அரசினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இதனுடன், 2018-19 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத்  தரவரிசையானது இந்திய அரசின் தலைமைக் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் முத்திரை அலுவலகத்தினால் இறுதி செய்யப் பட்டுள்ளது.
  • இதில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிடையே, சண்டிகர் காருன் பல்கலைக்கழகம் (Chandigarh University Gharuan) முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இது ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளை (336 காப்புரிமைகள்) தாக்கல் செய்ததற்காக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்து 239 காப்புரிமைத் தாக்கல்களுடன் டாடா ஆலோசக சேவைகள் நிறுவனம் இடம் பிடித்துள்ளது.
  • சிஎஸ்ஐஆர் (CSIR) 202 காப்புரிமைத் தாக்கல்களுடன் 3வது இடத்திலும் பிஎச்இஎல் (BHEL) ஆனது 173 காப்புரிமைத் தாக்கல்களுடன் 4வது இடத்திலும் உள்ளன.
  • ஒட்டுமொத்த காப்புரிமைத் தாக்கல் பிரிவில், 27 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் 557 காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளன.

மாநிலத்தின் செயல்பாடுகள்

  • பஞ்சாப் மாநிலமானது முதன்முறையாக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறையில் இந்தியாவின் முதல் 10 மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் 507 காப்புரிமைத் தாக்கல்களுடன் ஹரியானா இரண்டாம் இடத்திலும் 193 காப்புரிமைத் தாக்கல்களுடன் இமாச்சலப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்