இந்திய ஆந்தைத் திருவிழா 2018
December 11 , 2018
2272 days
671
- 2018 ஆம் ஆண்டின் இந்திய ஆந்தைத் திருவிழாவானது மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள புரந்தர் தாலூக்காவில் பின்கோரி கிராமத்தில் நடத்தப் பட்டது.
- இத்திருவிழா ஆந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலா அறக்கட்டளையால் நடத்தப்பட்டது.
- இது ஆந்தை குறித்த நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் குறும்படங்கள் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்ட நாட்டின் முதலாவது ஆந்தைத் திருவிழாவாகும்.
- உலகில் மொத்தமுள்ள 262 ஆந்தை இனங்களில், 75 ஆந்தை இனங்கள் “அச்சுறுத்தல் நிலையில்” உள்ளன.
- ஆந்தை இனங்கள் 1972 ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
Post Views:
671