ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் டிசம்பர் 07 அன்று இந்திய ஆயுதப் படை கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக கடுமையாகப் போரிடும் இந்திய வீரர்களையும், போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களையும் கௌரவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1949 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 07 ஆம் தேதியானது இந்திய ஆயுதப் படை கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவ வீரரின் நலன்கள் மற்றும் மறுவாழ்விற்காக “ஆயுதப் படை கொடி நாள் நிதியை” இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.