இந்திய ஆவணப்படமான ‘Writing with Fire’ சிறந்த ஆவணப்படம் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களான ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் ஆகியோரால் இயக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆனது 94வது அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
இந்தப் படம் பெண் பத்திரிகையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப் படுத்துகிறது.
இதற்கு முன், இந்தியாவில் எடுக்கப்பட்ட ‘Smile Pinki’ மற்றும் ‘Period. End Of Sentence' ஆகிய இரண்டு ஆவணப்படங்கள் சிறந்த ஆவணப்படத்திற்கான (குறும்படம்) ஆஸ்கார் விருதை வென்றுள்ளன.