TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் புதிய உடற்தகுதி கொள்கை

February 6 , 2024 165 days 154 0
  • இந்திய இராணுவம் ஆனது, "அதிகாரிகளிடையே உடற்தகுதி தரம் குறைந்து வருவதை" கருத்தில் கொண்டு புதிய உடற்தகுதிக் கொள்கையை அறிமுகம் செய்து உள்ளது.
  • இந்தப் புதியக் கொள்கையானது சோதனை நடைமுறையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவதையும், வாழ்க்கை முறை சார்ந்து ஏற்படும் நோய்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிகாரிகள் உடல் தகுதி இழத்தல் அல்லது உடல் பருமன் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போதைய விதிகளின்படி, காலாண்டுக்கு ஒருமுறை போர் முறை சார்ந்த உடல் தகுதித் திறன் தேர்வு (BPET) மற்றும் உடற்தகுதித் தேர்ச்சித் தேர்வு (PPT) நடத்தப்பட வேண்டும்.
  • உடற்தகுதி முன்னேற்றக் காலத்திற்குப் பிறகு சோதனையில் தோல்வியுற்றால், அந்தப் பணியாளர்களுக்கு எதிராக இராணுவ ஒழுங்குமுறை (AR) சட்டம் 15 மற்றும் இராணுவச் சட்டம் 22 ஆகியவற்றின் கீழ் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்