Services Ltd) இணைந்து புது தில்லியில் தனது அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக மின்சார மகிழுந்துகளுடன் கூடிய ஒரு சுற்றுச்சூழல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அத்தினத்தன்று இந்திய இராணுவத்திற்காக முதன்முறையாக ஏராளமான மகிழுந்துகள் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டன.
EESL ஆனது ஒரு மிகப்பெரிய ஆற்றல் சேவை நிறுவனமாகும். இது மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறனுக்கான தேசியத் திட்டத்தின் சந்தை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
EESL என்பது 4 தேசிய பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.