TNPSC Thervupettagam

இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு - 2017

November 15 , 2017 2594 days 1067 0
  • தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD – Rajiv Gandhi National Institute of Youth Development) 2017- ஆம் ஆண்டிற்கான இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு மற்றும் திட்ட அறிக்கையை (Youth Development under and Report 2017) தயார் செய்துள்ளது.
  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இதனை வெளியிட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான இந்திய இளைஞர் மேம்பாட்டுக் குறியீடு தயாரிப்பின் நோக்கம் நாடு முழுவதும் இளைஞர்கள் மேம்பாட்டின் போக்கை கண்காணித்தல் என்பதாகும்.
  • சர்வதேச இளைஞர் மேம்பாட்டு அறிக்கைகளோடு (Young Development Index) ஒத்திசையும் வகையில், இந்திய தேசிய இளையோர் கொள்கை (National Youth Policy – 2014) மற்றும் காமன்வெல்த் நாடுகளின் உலக இளைஞர் மேம்பாட்டு அறிக்கை போன்றவற்றில் அளிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் என்பதற்கான புதிய பொருள் விளக்கத்தைக் அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு தயாரிக்கப்படுகிறது.
  • 2014 தேசிய இளையோர் கொள்கை மற்றும் காமன்வெல்த் நாடுகளின் உலக இளையோர் மேம்பாட்டு அறிக்கையின்படி 15 வயது முதல் 29 வயது  வரையிலான வயதுடையவர்கள்  இளைஞர்களாவர்.
  • இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் இளைஞர்களாவர்.
  • உலக இளைஞர் மேம்பாட்டு குறியீடு (YDI – Young Development Index) உலகம் முழுவதும் 183 நாடுகளில் உள்ள இளைஞர்களின் நிலையை அளவிட்டு காமன்வெல்த் செயலகத்தால் (Common Wealth Secreteriate) வெளியிடப்படுகிறது.
  • 2016-ஆம் ஆண்டிற்கான உலக இளைஞர் மேம்பாட்டு குறியீட்டில், 183 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகள், அரசியல் ஈடுபாடு மற்றும் இளையோர்களுக்கான குடிமக்கள் பங்கெடுப்பு, சமூக உள்ளடக்கம் போன்ற பல பரிமாண காரணிகளின் அடிப்படையில் இந்திய இளைஞர் குறியீடு கணக்கிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்