TNPSC Thervupettagam

இந்திய உயர் இரத்த அழுத்த மேலாண்மை திட்டம்

December 2 , 2017 2551 days 792 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) ,மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைவுத் திட்டமே இந்திய உயர் இரத்த அழுத்த மேலாண்மை திட்டமாகும். (India Hyper Tension Management Initiative).
  • இந்தியாவில் இறப்புகளுக்கு முன்னணி காரணமாக உள்ள இருதய கோளாறுகளினால் உண்டாகும் நோயுற்ற தன்மை (morbidity) மற்றும் இறப்புகளை (mortality) குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
  • மத்திய சுகாதார அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாவட்டங்களில் படிப்படியாக முதல் இரண்டு வருடத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டம் உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய இருதய (Global Hearts initiative) திட்டம், மற்றும் தேசிய மருத்துவ வழிகாட்டுதல் போன்றவற்றோடு ஒத்திசைந்து நடப்பு சுகாதார கட்டமைப்பின் கீழ் முதன்மை சுகாதார நிலையங்கள் அளவில் உயர் இரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதலை  கண்காணிக்கவும்,    உயர் இரத்த அழுத்த மேலாண்மையை வலுப்படுத்தவும் நோக்கம் கொண்டது.
  • உயர் இரத்த அழுத்தங்களை கட்டுப்படுத்துவதை அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் உயர் இரத்த அழுத்தத்திற்கான தீவிரப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் மற்றும் செயல் தன்மையுடைய பரிசோதனைகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
  • இத்திட்டம் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான தேசிய கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (National Program for Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke-NPCDCS) இருதய நோய் கட்டுப்பாட்டுக் காரணிகளை வலுப்படுத்துவற்கான நோக்கம் உடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்