இந்திய உயிரியல் தரவு மையம்
November 21 , 2022
738 days
528
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் இந்திய உயிரியல் தரவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இது வாழ்க்கை அறிவியல் தரவுகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான களஞ்சியமாகும்.
- இது நாட்டில் அரசால் நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சியிலிருந்து உருவாக்கப்பட்ட அனைத்து வாழ்க்கை அறிவியல் தரவுகளையும் சேமிக்கும்.
- இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் (DBT) உதவியுடன் செயல்படுகிறது.
- இது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரித் தொழில்நுட்பப் பிராந்திய மையத்தில் நிறுவப்பட்டது.
- புவனேஷ்வரில் உள்ள தேசியத் தகவல் மையத்தில் (NIC) இதன் தரவு “பேரழிவு மீட்பு” தளம் உள்ளது.
- இது சுமார் 4 பெட்டாபைட் தரவுச் சேமிப்புத் திறன் கொண்டது.
- இது 'பிரம்' உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் (HPC) வசதியை வழங்குகிறது.
Post Views:
528