2021 ஆம் ஆண்டு வரை, இந்திய உறுப்பு தான தினமானது நவம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவில் ஜூலை மாதமானது உடல் உறுப்பு தான மாதமாக அனுசரிக்கப்படும் என NOTTO அமைப்பு (National Organ and Tissue Transplant Organization) அறிவித்துள்ளது.
இனி இந்திய உறுப்பு தான தினமானது ஆகஸ்ட் 03 ஆம் தேதி கொண்டாடப்படும்.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதியில், இந்தியாவில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்ட நோயுற்ற நபர் ஒருவரின் இதய மாற்று அறுவைச் சிகிச்சையின் நினைவாக ஆகஸ்ட் 03 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இறப்பிற்குப் பின் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுப்பதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதும், உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதும் இந்நாளின் நோக்கமாகும்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதியானது உலக உறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது.