TNPSC Thervupettagam

இந்திய எரிவாயுச் சந்தை அறிக்கை – 2030 ஆம் ஆண்டிற்கான கண்ணோட்ட அறிக்கை

February 16 , 2025 11 days 53 0
  • இந்திய எரிவாயுச் சந்தை அறிக்கை: 2030 ஆம் ஆண்டிற்கான கண்ணோட்ட அறிக்கை என்பது சர்வதேச எரிசக்தி முகமையினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இயற்கை எரிவாயு நுகர்வு ஆனது ஆண்டுதோறும் சுமார் 60 சதவீதம் அதிகரித்து சுமார் 103 பில்லியன் கன மீட்டர் (bcm) ஆக உயரும் என்றும், எரிவாயு இறக்குமதியானது 2030 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையானது 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு முதல், இந்திய நாடானது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையங்களின் எண்ணிக்கையினை சுமார் நான்கு மடங்காகவும், குடியிருப்புகளின் பயன்பாட்டிற்கான எரிவாயு இணைப்புகளை இரட்டிப்பாகவும் ஆக்கியுள்ளது.
  • எரிவாயு இடமாற்றக் குழாய் வலையமைப்பு ஆனது 40 சதவீதம் விரிவடைந்துள்ளது.
  • இந்தியாவிற்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி ஆனது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தியானது, 2023 ஆம் ஆண்டில் நாட்டின் தேவையில் 50 சதவீதத்தினை பூர்த்தி செய்யும் அளவில் இருந்தது என்ற நிலையில் மேலும் இது 2030 ஆம் ஆண்டில் படிப்படியாக 38 பில்லியன் கன மீட்டருக்கும் குறைவாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்