TNPSC Thervupettagam

இந்திய கடற்படை தினம் - டிசம்பர் 4

December 5 , 2017 2576 days 2533 0
  • 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட “ஆப்ரேஷன் டிரைடென்ட்”-ஐ நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 4-ஆம் தேதி தேசிய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்திய கடற்படையானது உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகும்.
  • தற்போது இது 46-வது கடற்படைதினம் ஆகும்.
  • இந்திய கடற்படையானது மூன்று மண்டலப் பிரிவுகளை (command) கொண்டுள்ளது.
    • கிழக்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் உள்ளது.
    • மேற்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
    • தென் மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் கொச்சியில் உள்ளது.
  • இம்மூன்று மண்டலங்களின் கீழ் இந்திய கடற்படை 66 கடற்படைத் தளங்களை நிர்வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்