TNPSC Thervupettagam

இந்திய கடல் மட்டம் உயர்வு

July 11 , 2019 1836 days 653 0
  • புவி அறிவியல் அமைச்சகத்தால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி டைமண்ட் துறைமுகமானது அதிகபட்ச கடல் மட்ட உயர்வைப் பதிவு செய்துள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி ஆற்று முகத்துவாரத்தில் டைமண்ட் துறைமுகம் அமைந்துள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் கடல் மட்ட உயர்வு அதிகமாக உள்ளது. இது குறிப்பாக சுந்தரவன கழிமுகத் துவாரப் பகுதிகளில் நன்னீர் மற்றும் உப்புநீர் ஆகியவை கலந்ததின் விளைவாக டெல்டா வண்டல் படிவுகளினால் ஏற்பட்டதாகும்.
  • கடந்த 40-50 ஆண்டுகளில் நாட்டின் கடல் நீர்மட்ட உயர்வானது இந்தியக் கடற்கரைகளில் ஆண்டுக்கு 1.3 மி.மீ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால் இந்த டைமண்ட் துறைமுகத்தின் நீர்மட்ட உயர்வானது ஏறக்குறைய 5 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு 5.16 மி.மீ. ஆக உள்ளது.
  • குஜராத்தில் உள்ள காண்ட்லா, மேற்கு வங்காளத்தின் ஹால்தியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட்பிளேர் ஆகிய துறைமுகங்களும் இந்த கடல் மட்ட உயர்வைப் பதிவு செய்துள்ளன.
  • இந்தியப் பிராந்தியத்தின் மீதான ஆய்வுகளானது அகில இந்திய சராசரி அடிப்படையில் 0.6ºC அளவில் வெப்பமயமாகும் போக்கைக் காட்டுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்