இந்திய கான மயில் பறவைகளைப் பாதுகாக்க அவசர கால பிரச்சாரம்
December 23 , 2018 2165 days 1062 0
சமீபத்தில் ‘உயர் அச்சுறுத்தல்’ என்ற பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள இந்திய கான மயில் பறவைகளை (Great Indian Bustard - GIB) பாதுகாப்பதற்கான அவசர கால பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த பிரச்சாரமானது உலக அளவிலான இந்திய கான மயில் பறவைகளின் எண்ணிக்கை 150-ஐ விட குறைவாக உள்ள நிலையில் அவை அழிவு நிலையை அடையாமல் அதனை காப்பாற்றுவதற்காக அதிகம் தேவைப்படுகின்ற ஒரு பிரச்சாரமாகும்.
இந்த பறவைகள் கடைசியாக அதிக அளவில் வசிக்கும் இடமாக ராஜஸ்தான் மாநிலம் உள்ளது.
150-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ள இப்பறவைகளில் 100 பறவைகள் தார் பாலைவனப் பகுதியில் வசிக்கின்றன.
10 முதல் 25 வரையிலான எண்ணிக்கையுடன் குஜராத் 2வது அதிக எண்ணிக்கையுடைய இடத்தில் உள்ளது.
இப்பிரச்சாரத்தை துவங்கியுள்ள வனவிலங்கு நிறுவனங்களில் கார்பெட் அறக்கட்டளையுடன் இணைந்துள்ள பாதுகாப்பு இந்தியா மற்றும் இயற்கை சரணாலய அறக்கட்டளை ஆகியவையும் அடங்கும்.
சுதந்திர இந்தியாவில் முற்றிலும் அழியும் முதல் இனமாக இப்பறவை இனம் இருக்கும் என பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
புல்வெளியில் வசிக்கும் இந்த உயிரினங்கள் தனது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 95% அளவில் அழிந்து விட்டன.