சர்வதேச காமன்வெல்த் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 13 தேதி அன்று கொண்டாடப் படுகிறது.
ஆனால் இது இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் மே மாதம் 24 தேதி அன்று அனுசரிக்கப் படுகிறது.
விக்டோரியா மகாராணி 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று காலமானதைத் தொடர்ந்து, 1902 ஆம் ஆண்டில் காமன்வெல்த் தினம் முதன்முதலில் அவரைக் கௌரவிக்கும் விதமாகக் கொண்டாடப் பட்டது.
இந்த முக்கியமான நாளின் முதல் நினைவு நாள் 1902 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அன்று நடந்தது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "ஒரு நிலையான மற்றும் அமைதியான பொதுவான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்பதாகும்.