இந்திய கைபேசி மாநாட்டின் (India Mobile Congress) இரண்டாவது பதிப்பு 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்திய கைபேசி மாநாட்டின் இரண்டாவது பதிப்பினுடைய கருப்பொருள் “புதிய டிஜிட்டல் எல்லை அடுக்குகள் - இணைப்பு, உருவாக்கம், புத்தாக்கம்” (New Digital Horizons - Connect, Create, innovate) என்பதாகும்.
இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் (Cellular Operators Association of India-COAI) மற்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) ஆகியவை இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளன.
முதல் இந்திய கைபேசி மாநாடு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புது தில்லியில் பிரகதி மைதானில் நடைபெற்றது.
தொலைத் தொடர்பு துறையின் எதிர்கால செயல்பாட்டை வழி நடத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் ஓர் அர்த்தமுள்ள விவாதத்தில் (meaningful deliberations) ஈடுபட அவர்களுக்கு ஓர் மேடையை வழங்குவதற்காக 2017-ஆம் ஆண்டு இந்திய கைபேசி மாநாடு துவங்கப்பட்டது.