துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் இந்திய சமையற்பயிற்சி நிறுவனத்தை துவக்கி வைத்தார்.
இது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்த பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் தேசிய கட்டிடங்களுக்கான கட்டமைப்புக் கழகத்தால் (National Building Construction Corporation - NBCC) வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்திய உணவு வகைகள் பற்றிய தகவல்களை பாதுகாப்புடன் பத்திரப்படுத்தி, அவற்றைப் பரவச் செய்திடுவதற்கான நடவடிக்கைகளுக்கான ஆதரவை நிறுவனப்படுத்துவதாகும்.