TNPSC Thervupettagam

இந்திய சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சி - 2020

February 8 , 2020 1632 days 656 0
  • 2020 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சியின் (India International Seafood Show - IISS) 22வது பதிப்பானது கேரளாவின் கொச்சியில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியானது “நீலப் புரட்சி - உற்பத்திக்கு அப்பால் மதிப்பு கூட்டல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகின்றது.
  • இந்த நிகழ்ச்சியானது கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு கொச்சியில் தற்பொழுது நடைபெற்றது. இதன் 21வது பதிப்பானது கோவாவில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்