இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு ஆனது கடந்த பத்தாண்டுகளில் 60% வளர்ச்சியடைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 91,287 ககிலோ மீட்டராக இருந்த இது 2024 ஆம் ஆண்டில் 146,195 கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது.
இது உலகளவில் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பாக அமைகிறது.
கூடுதலாக, அதிவேக வழித்தடங்களின் தொலைவானது 93 கிலோ மீட்டரிலிருந்து 2,474 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளன.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, திட்டமிடப்பட்ட 3,105 கிலோ மீட்டரில் 2,540 கிலோ மீட்டர் பாதை நிறைவடைந்துள்ள நிலையில், பன்னாட்டு நிதி உதவி பெறும் திட்டங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன.