முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரு தரப்பு அதிகாரிகளும் எல்லை அமைதி மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் (BPTA) கையெழுத்திட்டனர்.
இதற்கு “இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள மெய் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கான ஒப்பந்தம்” என்று பெயரிடப்பட்டது.
இரு தரப்பினரும் அப்போதைய நிலையைத் தொடர்ந்து பேணிக் காத்து, எதிர்பாரா மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைப்பதற்காக சட்டப்பூர்வமாக உறுதியளித்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஒப்பந்தம் ஆனது, இரு தரப்பினரையும் அப்போதைய நிலையைப் பேணிக் காக்கவும், எதிர்பாராத மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்கவும், LAC பகுதியில் இராணுவப் படைகளைக் குறைக்கவும் உறுதியளிக்கச் செய்தது.
LAC ஆனது இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை சீன நாட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பிரிக்கிறது.
இது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
கிழக்குப் பகுதி (அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம்)
மத்தியப் பகுதி (உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்)