இந்திய சுந்தரவனக் காடுகளில் உள்ள விலங்குகளின் தகவல்கள் தொகுப்பு
September 13 , 2017 2667 days 1072 0
இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு (ZSI) நிறுவனம் முதன் முறையாக “இந்திய துணைக்கண்டத்தின் சுந்தரவன உயிர்க்கோள இருப்பின் விலங்கினங்கள்” (‘Fauna of Sundarbans Biosphere Reserve in Indian Sundarbans’) எனும் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
சுந்தரவனப் பகுதி யுனஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய நினைவிடங்களில் ஒன்றாகும்.
இது உலகின் மிகப்பெரிய உவர்ப்பான அலைமுகத்துவார மாங்குரோவ் காடுகளை உடையதாகும்.
மேலும் இது 104 தீவுகளில், 9630 சதுர கீ.மி க்கு பரந்துள்ள, கங்கை – பிரம்மபுத்திரா டெல்டாவின் ஒரு பகுதியாகும்.
ZSI
1916ல் உருவாக்கப்பட்ட விலங்கின வகைப்பாட்டினத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் உச்ச அமைப்பு.
இந்திய துணைக்கண்டத்தில் விலங்கின வகைப்பாட்டினிலுள்ள கணக்கெடுப்பு, கள ஆய்வு (Exploration), ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல் போன்ற பல அம்சங்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.