TNPSC Thervupettagam

இந்திய சுறா மீன்கள் குறித்த ஆய்வு

December 26 , 2020 1435 days 596 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சுறாமீன் வல்லுநர் குழுவானது இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone - EEZ) சுறா மீன்கள், மீன் துடுப்புக் கதிர்கள் மற்றும் சிம்மேராஸ்  ஆகியவற்றை ஆய்வு செய்தது.
  • இந்த ஆய்வானது இந்திய EEZ பகுதியிலிருக்கும் சுறா மீன்கள், மீன் துடுப்புக் கதிர்கள் சிம்மேராஸ் ஆகிய 170 மீன் இனங்களில் 19 இனங்களைமிகவும் அருகி வரும் இனங்களாக(Critically Endangered - CE) வகைப்படுத்தி இருக்கின்றது.
  • இது முதன்முறையாக இந்தியப் பெருகு சுறா சிபாலோஸ்கிலியம் சிலாசி என்ற ஒரு இனத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட புவியியல் வரம்பு மற்றும் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றின் காரணமாக ”CE” என வகைப்படுத்தி இருக்கின்றது.
  • இந்தியப் பெருகு சுறாமீன் என்பது கேரளா, இலங்கை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றின் கடற்கரைகளில் காணப்படும் ஒரு ஆழ்கடல் பூனை வகை சுறா மீனாகும்.
  • கடல் வெள்ளை நுனி சுறாமீன் ஆனது அருகி வரும் இனமாக முன்பு வகைப்படுத்தப் பட்டு இருந்தது. இது தற்பொழுதுமிகவும் அருகி வரும் உயிரினமாகவகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்