சுற்றுச்சூழல் புள்ளி விவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகளைக் கொண்ட வருடாந்திர அளவீட்டு அறிக்கையான இந்திய சுற்றுச்சூழல் 2019 அறிக்கையானது என்பது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மைய உதவியுடன் வெளியிடப்படும் Down To Earth என்ற பத்திரிக்கையால் தொகுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய கண்டுபிடிப்புகள்
இந்தியாவின் மொத்த இறப்புகளில் 12.5 சதவீத இறப்பிற்குக் காற்று மாசுபாடு காரணமாகும்.
2030 ஆம் ஆண்டின் ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்கினை அடைவதற்கு, காலநிலை மாற்ற ஆயத்தப் பணிகளை கண்காணிக்கும் குறியீடுகளை இந்தியா இதுவரை கண்டறியவில்லை.
நாட்டில் உள்ள நிலப்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் இரண்டுமே மிகவும் குறைவாக உள்ளது. 86 நீர்நிலைகள் மிகக் கடுமையாக மாசுபட்டுள்ளன.
24 x 7 பொது சுகாதார மையங்களின் எண்ணிக்கையானது 35 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் 26 சதவீத மருத்துவ அலுவலர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
2050 ஆம் ஆண்டளவில் உலகின் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் எண்ணிக்கையில் 416 மில்லியன் மக்களை இந்தியா இணைக்கும் எனவும் உலகளாவிய மக்கள் தொகையில் 58 சதவீதத்திற்குத் தாயகமாக இந்தியா இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
2010 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கிடையே இந்தியாவின் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது 22% சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவானது சக்தி வாய்ந்த காட்டுத்தீ கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பிற்கு மாறியுள்ளது. (SWPP–VIIRS) இதன் மூலம் சிறந்த துல்லியத் தன்மையுடனும் நுட்பமாகவும் காட்டுத் தீயைக் கண்டறிய இயலும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வேலையின்மை விகிதமானது, 1.9 மடங்கு அதிகரித்துள்ளது.