இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் என்பது ‘ஹிக்கி-இன் பெங்கால் கெஸட்’ என்ற ஆங்கில வார இதழாகும்.
இது 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஓர் அயர்லாந்து நாட்டவரால் தொடங்கப் பட்டது.
இந்த நாள் ஆனது நாளிதழ்களை மேம்படுத்துவதையும், செய்தித்தாளை எடுத்து ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
பெங்கால் கெஸட் பத்திரிக்கையின் நிறுவனர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி "இந்தியப் பத்திரிகைகளின் தந்தை" என்று கருதப்படுகிறார்.
இந்தியாவில் தற்போதுள்ள மிகப் பழமையான செய்தித்தாள் ஆனது, 1822 ஆம் ஆண்டில் குஜராத்தி மொழியில் முதல் முறையாக வெளியிடப்பட்ட மும்பை சமாச்சார் (முன்னதாக பாம்பே சமாச்சார்) ஆகும்.
இந்தியாவின் முதல் தமிழ் செய்தித்தாள் 1882 ஆம் ஆண்டில் G.சுப்ரமணிய ஐயர் அவர்களால் ஒரு வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்ரன் ஆகும்.