TNPSC Thervupettagam

இந்திய – ஜப்பான் அணு ஆற்றல் ஒப்பந்தம்

July 21 , 2017 2554 days 954 0
  • ஆணு ஆயுத ஆற்றலை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான கூட்டுறவு உடன்படிக்கை இரு நாடுகளுக்கு இடையே ஜூலை 20,2017 அன்று கையெழுத்தானது. இந்த உடன்படிக்கை தற்போது அமலுக்கு வந்துள்ளது .
  • அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருந்த பொழுது , இந்த உடன்படிக்கை கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான உத்தி ரீதியான நல்லுறவின் பிரதிபலிப்பாகும். மேலும், இந்த ஒப்பந்தமானது ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களில் இரு நாட்டிற்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.
  • அணுசக்தி ஆற்றலை அமைதியான நோக்கங்களுக்கு , நிலையான மற்றும் நம்பகமான முறையில் , நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது இந்த உடன்படிக்கையின் நோக்கம் ஆகும்.
  • அமெரிக்காவின் முக்கியமான அணுசக்தி நிறுவனங்கள் , தோஷிபா போன்ற ஜப்பானின் பெருநிறுவனங்களுக்குச் சொந்தமானவை ஆகும். எனவே , இத்தகைய உடனபடிக்கையானது இந்திய நாட்டுக்கு, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடனான அணு ஆற்றல் கூட்டமைப்புக்கு பெரும் பங்களிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்