மூன்றாவது இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றமானது, “தூய்மையான காற்று பசுமையான பொருளாதாரம்” என்ற கருத்துருவுடன் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
குழு விவாதங்கள் மற்றும் இணையான அமர்வுகளின் மூலம் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இது காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான சவால்கள், தீர்வுகள் மற்றும் கட்டமைப்பு நிலைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
மேலும் இது, பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் ஐ.நா. வின் பணிநிரல் 2030 ஆகியவற்றை மையமாகக் கொண்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் மீதான கவனத்தைச் செலுத்துகிறது.