TNPSC Thervupettagam

இந்திய தண்ணீர் வாரம்-2017

October 11 , 2017 2473 days 836 0
  • இந்திய தண்ணீர் வாரம்-2017 எனும் சர்வதேச  நிகழ்ச்சி இந்திய  குடியரசுத் தலைவரால் புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சி மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு, மற்றும் கங்கை புனரைமைப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது .
  • 13 நாடுகள் பங்குபெறும் 5வது இந்திய தண்ணீர் வாரத்தின் நிகழ்ச்சிகளில் பலதுறைகள் சார்ந்த மாநாடுகள் நடக்க உள்ளன.
  • நீர்வள மேம்பாடு, நீர்வள மேலாண்மை, நீடித்த ஆற்றல் மேம்பாடு, நீர், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற பல களங்களில் உலக நாடுகளின் திட்ட வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர்கள் போன்றோரின் ஆலோசனை மற்றும் கருத்துகளை பெறுவதற்கான தளமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டிற்கான இந்திய தண்ணீர் வாரத்தின் கருத்துரு - “உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தண்ணீர் மற்றும் ஆற்றல்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்