இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் - அனுபம் கெர்
October 12 , 2017 2747 days 1335 0
புனேவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (Film and Television institute of India – FTIT) தலைவராக நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு முன் இவர் தணிக்கை ஆணையம் மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனமானது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்.
சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 ன் கீழ் இந்நிறுவனம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கான சர்வதேச தொடர்பு மையத்தின் (International Liaison Centre of Schools of Cinema and Television -CILECT) உறுப்பினராகவும் உள்ளது.