TNPSC Thervupettagam

இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் குறியீடு – ஆகஸ்டு

October 14 , 2017 2599 days 960 0
  • மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய தொழிலக உற்பத்தி விகிதத்தின் (Index of Industrial production - IIP) அடிப்படையில் அளக்கப்பட்ட தொழிற்சாலை உற்பத்தி ஒன்பது மாதத்திலேயே அதிக அளவாக ஆகஸ்ட் மாதத்தில் 3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இதற்கு முக்கிய காரணம் மூலதன பொருட்களின் அதிக அளவிலான உற்பத்தியோடு, வலுவான வகையில் சுரங்கத்துறை மற்றும் மின்சக்தித் துறையின் செயல்திறன் இணைந்து பங்களித்ததே ஆகும்.
இந்திய தொழிலக உற்பத்தி விகிதம்
  • இது இந்தியாவிற்கென உள்ள உற்பத்தி விகிதப் பட்டியல் ஆகும். இதில் தாதுச் சுரங்கம், மின்சக்தி மற்றும் உற்பத்தி ஆகிய பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளின் வளர்ச்சி பற்றிய விவரங்கள் பட்டியலிடப்படுகின்றன.
  • இது அகில இந்திய அளவிலான ஒரு முழுமையான மற்றும் குறுகிய காலத்தில் ஏற்படும் உற்பத்தி மாற்றங்களை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடு ஆகும். சில முக்கியமான தொழிற்துறை பொருட்களின் உற்பத்தி அளவிலான மாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட கால அளவோடு தற்போது வரை குறிப்பிட்ட கால அளவோடு ஒப்பிடப்பட்டு வெளியிடப்படும். இது மத்திய புள்ளியியல் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு குறிப்பிட்ட மாதம் முடிந்த ஆறு வாரத்திற்குப் பிறகு மாதந்தோறும் வெளியிடப்படுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்