TNPSC Thervupettagam

இந்திய நாட்டினை நிகர சுழிய உமிழ்வு நிலைக்குக் கொண்டு செல்தல்

September 10 , 2022 680 days 430 0
  • இந்தியா 2050 ஆம் ஆண்டிற்குள் இலக்கை எட்ட வேண்டுமென்றால் 13.5 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியா 2070 ஆம் ஆண்டிற்குள் அதன் நிகர-சுழிய உமிழ்வு இலக்கை அடைய வேண்டுமென்றால், இப்போதிலிருந்துப் பொருளாதாரத்திற்கு 10.1 டிரில்லியன் டாலர் என்ற அளவிலான முதலீடு தேவைப்படும்.
  • 2070 ஆம் ஆண்டில் நிகர சுழியம் என்ற ஒரு இலக்கை அடைவதன் மூலம், 2036 ஆம் ஆண்டில் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியை 4.7% வரை உயர்த்தி 2047 ஆம் ஆண்டிற்குள் 15 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்டப் பங்களிப்பு (NDC) இலக்குகள் தற்போதையக் கொள்கைகள் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் முன்கூட்டியே எட்டப்படும்.
  • 2030 ஆம் ஆண்டிலேயே இந்தியா உமிழ்வுகளில் உச்சத்தை எட்டக்கூடும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்