TNPSC Thervupettagam

இந்திய நிதி நிலைத்தன்மை அறிக்கை

January 3 , 2019 2155 days 772 0
  • வருடத்திற்கு இருமுறை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நிதிநிலைத் தன்மை அறிக்கையின் (Fiscal Stability Report-FSR) 2018 ஆம் ஆண்டிற்கான 18-வது வெளியீட்டை சமீபத்தில் RBI வெளியிட்டுள்ளது.
  • இந்த FSR ஆனது நிதிநிலைத் தன்மைக்கான அபாயங்கள் மற்றும் நிதி அமைப்பின் தாங்குதிறன் ஆகியவற்றின் மீதான நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவினுடைய துணைக் குழுவின் கூட்டு மதிப்பீட்டைப் பிரதிபலிக்கிறது.
  • உர்ஜித் படேலின் பதவி விலகலைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் சக்திகாந்த தாஸ் RBI-ன் ஆளுநராக பொறுப்பேற்ற பின் வெளியிடப்படும் முதல் அறிக்கை இதுவேயாகும்.
முக்கிய குறிப்புகள்
  • பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன்களின் விகிதமானது (Gross Non-Performing Assets -GNPA) 2015 மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அரை வருட வீழ்ச்சியினை அடைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11.5% ஆக இருந்த பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் நிகர வாராக் கடன்களின் விகிதமானது 2018 செப்டம்பரில் 10.8% ஆக குறைந்துள்ளது.
  • மறுசீரமைக்கப்பட்ட நிலையான முன்னேற்றங்களின் விகிதமானது 2018 செப்டம்பரில் 0.5% அளவில் சீராக வீழ்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்