TNPSC Thervupettagam

இந்திய நியாயவேலை 2023 அறிக்கை

November 3 , 2023 261 days 210 0
  • 'இந்திய நியாயவேலை 2023' என்ற அறிக்கையானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 12 இயங்குதளங்களில் ஏழு தளங்கள், அவற்றின் ஒப்பந்தங்களின் அணுகல் மற்றும் புரிந்து கொள்ளக் கூடியத் தன்மை ஆகியவற்றினை உறுதி செய்கின்றன.
  • மேலும் இது தரவுப் பாதுகாப்பு மற்றும் பணியாளர் தரவுகளை மேலாண்மை செய்வதற்கான நெறிமுறையைக் கொண்டுள்ளது.
  • பிக்பாஸ்கெட், ஃப்ளிப்கார்ட் மற்றும் அர்பன் கம்பெனி ஆகியவை மட்டுமே குறைந்த பட்ச ஊதியக் கொள்கையைக் கொண்ட தளங்களாக உள்ளன.
  • பிக்பாஸ்கெட், ஸ்விக்கி, அர்பன் கம்பெனி, ஜெப்டோ மற்றும் சோமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு கூடுதல் செலவின்றி விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கியதற்காக இரண்டாவது மதிப்பீட்டு புள்ளி வழங்கப் பட்டது.
  • எண்ணிம இயங்குதளங்களான ஓலா மற்றும் போர்ட்டர் ஆகியவை எண்ணிம வழி தொழிலாளர் இயங்குதளங்களில் இருந்து இணையம் மூலம் திரட்டப்படும் பல்வேறு தொழிலாளர்களின் பல்வேறு வேலைச் சூழல்களின் அடிப்படையில் மிகவும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்