TNPSC Thervupettagam

இந்திய நிலச்சரிவுப் பாதிப்பு வரைபடம்

January 8 , 2024 326 days 311 0
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் குழுவானது, இந்தியாவிற்கான முதல் உயர் தெளிவுத் திறன் கொண்ட நிலச்சரிவுப் பாதிப்பு அபாய வரைபடத்தை உருவாக்குகிறது.
  • இந்தியாவில் உள்ள எந்தவொரு இடமும் விடுபடாமல், உள்ளடக்கிய தேசிய அளவிலான பாதிப்பு வரைபடமாக இருப்பதன் மூலம் இது இவ்வகையிலான முதல் வரைபடமாகும்.
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் வடக்கே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் போன்ற நிலச்சரிவு ஆபத்துகள் அதிகம் உள்ள முன்பின் பதிவாகாத சில இடங்களையும் இது வெளிப்படுத்தியது.
  • இது அதிகளவில் நிலச்சரிவினால் பாதிப்படையும் பகுதிகளை அடையாளம் காணவும், இடர் தணிப்பு உத்திகளுக்கு அங்குள்ள வளங்களை சிறப்பான முறையில் ஒதுக்கிப் பயன்படுத்தவும் உதவும்.
  • இந்தியாவில் நிலச்சரிவு என்பது ஒரு தனித்துவமான மற்றும் மோசமானப் பிரச்சனை ஆகும்.
  • வெள்ளப் பாதிப்பு போலல்லாமல், நிலச்சரிவு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படக் கூடியவை என்பதால், செயற்கைக் கோள்களின் உதவியுடன் கண்காணிப்பது மற்றும் ஆய்வு செய்வது கடினம் ஆகும்.
  • நிலச்சரிவுகள் மிகவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நிகழ்கின்றன என்பதோடு நாட்டின் 1-2% பகுதிகள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்