டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் குழுவானது, இந்தியாவிற்கான முதல் உயர் தெளிவுத் திறன் கொண்ட நிலச்சரிவுப் பாதிப்பு அபாய வரைபடத்தை உருவாக்குகிறது.
இந்தியாவில் உள்ள எந்தவொரு இடமும் விடுபடாமல், உள்ளடக்கிய தேசிய அளவிலான பாதிப்பு வரைபடமாக இருப்பதன் மூலம் இது இவ்வகையிலான முதல் வரைபடமாகும்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் வடக்கே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் போன்ற நிலச்சரிவு ஆபத்துகள் அதிகம் உள்ள முன்பின் பதிவாகாத சில இடங்களையும் இது வெளிப்படுத்தியது.
இது அதிகளவில் நிலச்சரிவினால் பாதிப்படையும் பகுதிகளை அடையாளம் காணவும், இடர் தணிப்பு உத்திகளுக்கு அங்குள்ள வளங்களை சிறப்பான முறையில் ஒதுக்கிப் பயன்படுத்தவும் உதவும்.
இந்தியாவில் நிலச்சரிவு என்பது ஒரு தனித்துவமான மற்றும் மோசமானப் பிரச்சனை ஆகும்.
வெள்ளப் பாதிப்பு போலல்லாமல், நிலச்சரிவு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படக் கூடியவை என்பதால், செயற்கைக் கோள்களின் உதவியுடன் கண்காணிப்பது மற்றும் ஆய்வு செய்வது கடினம் ஆகும்.
நிலச்சரிவுகள் மிகவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நிகழ்கின்றன என்பதோடு நாட்டின் 1-2% பகுதிகள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றன.