TNPSC Thervupettagam

இந்திய நீதி அறிக்கை 2025

April 19 , 2025 3 days 59 0
  • நான்காவது இந்திய நீதி அறிக்கையின்படி, இந்தியாவின் 5 தென் மாநிலங்கள் காவல், நீதி வழங்கல் மற்றும் சிறை மேலாண்மை ஆகியவற்றில் மிகவும் வெகு சிறப்பாகச் செயல்படுகின்றன.
  • பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்கள் பிரிவில் அனைத்து முன்னணி இடங்களையும் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் பெற்றுள்ளன.
  • மேற்கு வங்காளம் ஆனது இப்பட்டியலில் கடைசி இடங்களிலும், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட், ஜார்க்கண்ட் மற்றும் இராஜஸ்தான் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
  • ஏழு சிறிய மாநிலங்களில், சிக்கிம் சிறப்பான செயல் திறனுடனும், கோவா பின்தங்கிய நிலையிலும் உள்ளன.
  • நீதியின் நான்கு தூண்களான காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் இந்த மாநிலங்களின் ஒரு செயல்திறன் ஆனது இந்தத் தர வரிசைக்கான காரணிகளாகக் கருத்தில் கொள்ளப் பட்டன.
  • குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் நீதி வழங்குவதிலும் மாநிலங்கள் முன்னேறி வரும் அல்லது பின்தங்கிய பகுதிகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • தேசிய அளவில், காவல்துறை-மக்கள்தொகை விகிதம் ஆனது 100,000 பேருக்கு 155 காவல்துறையினர் என்ற அளவில் மிகவும் தேக்க நிலையில் உள்ளது என்பதோடு இது அனுமதிக்கப்பட்ட 197.5 என்ற எண்ணிக்கையினை விடக் கணிசமாகக் குறைவு ஆகும்.
  • பீகார் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு 81 காவல்துறையினர் மட்டுமே என்ற அளவு விகிதத்தில் மிக மோசமான காவல்துறை-மக்கள்தொகை விகிதம் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் கடைசிப் பதிப்பிலிருந்து, சட்ட உதவி வழங்குதல் பிரிவில் ஹரியானா மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • கடந்த ஒரு பத்தாண்டுகளில், சிறைச் சாலைகளின் உள்ள கைதிகளின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்துள்ளது.
  • டாடா அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்ட இந்திய நீதி அறிக்கையானது, 2019 ஆம் ஆண்டில் அதன் முதல் அறிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்