இரயில் நிலையத்தில், பசுமைக் கட்டிட அம்சங்கள் மற்றும் கருத்தாக்கங்கங்களை பின்பற்றியமைக்காக ‘இந்திய பசுமை கட்டிடக் குழுவின் சான்றிதழை’ சென்னை சென்ட்ரல் இரயில் நிலையமானது பெற்றுள்ளது.
இதன் மூலம் தெற்கு இரயில்வேயில் பசுமைக் கட்டிடச் சான்றைப் பெற்ற முதல் இரயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்ட்ரல் இரயில் நிலையமானது பல பசுமை கட்டுமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில :
100% எல்.இ.டி (LED) விளக்குகள்
5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற மின்விசிறிகள்
சூரிய சக்தி உபயோகம் மற்றும் சூரிய ஒளியிலான நீர் சூடேற்றும் கருவி
கழிவுப் பொருள்களை தரம் பிரித்தல் மற்றும் மறுசூழற்சி செய்தல்
இந்திய தொழில் கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) நிறுவப்பட்ட இந்திய பசுமைக் கட்டிடக் குழுவானது (IGBC - Indian Green Building Council), 15 செப்டம்பர் 2018 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற ‘இரயில் ஸ்வச்சதா’ திட்டத்தின் போது இச்சான்றிதழை வழங்கியது.